எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
காலி, பெந்தோட்டையில் (Bentota) நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து புதிய அணுகுமுறையுடன் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு மத மற்றும் இன வேறுபாடுகளும் இன்றி, அனைவரின் ஆதரவையும் பெற விரும்புவதாக திலகரத்ன டில்ஷான் இதன்போது தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்பட்டதாகத் தெரிவித்த அவர் கடந்த ஆட்சியில் அதில் பின்னடைவை சந்திக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் திலகரத்ன டில்ஷான் கூறினார்.
இதேவேளை, தனது சர்வதேச தொடர்புகளின் மூலம் காலி மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய தான் எதிர்பார்த்துள்ளதாகவும் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..