கொழும்பு நகரில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் இன்று முதல் படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கையை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திட்டம், முன்னெடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W சொய்சா தெரிவித்துள்ளார்.
இதற்காக, பொதுமக்களிடமிருந்து நியாயமான கட்டணமே அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதன் முழுமையான பலன் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமது நோக்கமாகும் எனவும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W சொய்சா மேலும் கூறியுள்ளார்
0 Comments
No Comments Here ..