பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை எவ்வாறான காரணங்களுக்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..