22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள்

எதிர்வரும் பொதுதேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்கொள்ளப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எவ்வாறான காரணங்களுக்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கான நாட்டிலுள்ள அனைத்து தெரிவத்தாட்சி அலுவலர்கள் நேற்று தேசிய தேர்கல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தேர்தல் காலங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்பது குறித்து இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டது.

எதிர்வரும் பொது தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 12ம் திகதி முதல் 19 திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு