களனி பல்கலைக்கழகத்தின் வார இறுதி கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய முதுகலை டிப்ளோமா கற்கைநெறிகள், டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கை நெறிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பாடல் ஊடகப்பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை களனி பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கருவி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் தலுகம வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..