உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மொனராகலை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு தரப்பினர் சாட்சியங்களை பதிவு செய்துள்ள நிலையில் அது தொடர்பான இறுதி அறிக்கை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும் குறித்த விசாரணைகளில் திருப்தியில்லை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..