20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக பூசா கடற்படை முகாம்

புதிய கொரோனா வைரஸ் (கொவிட் - 19) சர்வதேச ரீதியில் பரவுவதன் காரணமாக நாட்டுக்கு வருவோரை தனிமைப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தேசிய பொறுப்பை ஊக்குவிக்க கடற்படை கடந்த 16 ஆம் திகதி பூசா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தும் மத்திய நிலையம் ஒன்றை அமைத்துள்ளது.

4 மாடிகளை கொண்ட குறித்த கட்டடத்தில் 136 பேர் தங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தை நோக்கி வரும் நபர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள், வைஃபை, தொலைக்காட்சி, மின்சார உபகரணங்கள் ஆகிய வசதிகளை பெற்றுக் கொடுக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.




தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக பூசா கடற்படை முகாம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு