29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

தோனி கேப்டன்சியை புகழும் கம்பீர்

ஐபிஎல் 2021, மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 15வது போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி மன்னன் ஆந்த்ரே ரஸல் வெற்றியை நோக்கி அணியை இட்டுச் சென்ற போது சாம் கரன் அவரை பவுல்டு செய்தார், அது அருமையான ஒரு கண்கட்டு வித்தை, மிகப்பிரமாதமாக ரஸலை ஏமாற்றினர் என்று கவுதம் கம்பீர், தோனியின் கேப்டன்சியைப் புகழ்ந்துள்ளார்.


ஐபிஎல் 2021, மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 15வது போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி மன்னன் ஆந்த்ரே ரஸல் வெற்றியை நோக்கி அணியை இட்டுச் சென்ற போது சாம் கரன் அவரை பவுல்டு செய்தார், அது அருமையான ஒரு கண்கட்டு வித்தை, மிகப்பிரமாதமாக ரஸலை ஏமாற்றினர் என்று கவுதம் கம்பீர், தோனியின் கேப்டன்சியைப் புகழ்ந்துள்ளார்.

220 ரன்களை விரட்டிய கொல்கத்தா அணி 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து பிறகு தினேஷ் கார்த்திக், ரஸல், பாட் கமின்ஸின் அதிரடி ஆட்டங்களினால் தோனியின் வயிற்றில் புளியைக் கரைத்து 200 ரன்கள் வரை வந்தனர். 19.1 ஓவரில் கடைசி வீரர் ரன் அவுட் ஆனதால் கமின்ஸ் 66 ரன்களில் தேங்கினார். இரு அணிகளும் மொத்தம் 26 சிக்சர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.


ஒன்றுமேயில்லாமல் போன ஆட்டத்தை கார்த்திக், ரஸல், கமின்ஸ் திருப்பினர். சாம் கரனின் ஒரே ஒவரில் 30 ரன்கள் விளாசப்பட்டது, ஆனால் கடைசியில் சாம் கரன் ஆந்த்ரே ரசலை பவுல்டு செய்து வெற்றி கண்டார். ரஸல் 21 பந்துகளில் அதிரடி அரைசதம் கண்டு வெளியேறினார். இது திருப்பு முனை விக்கெட்.


அதாவது ஷர்துல் தாக்கூர் வைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை வீசி ரஸலின் மனநிலையை அதற்கு செட் செய்தார். முழுதும் ஆஃப் சைடில் பீல்டிங் நெருக்கப்பட்டது, இதனால் சாம் கரன் வைடு ஆஃப் ஸ்டம்பில்தான் வீசுவார் என்று முன் கூட்டியே தீர்மானித்த ரஸல் ஆஃப் திசையில் ஒதுங்கி சாம் கரன் பந்தை ஆட முயன்றார். ஆனால் பந்து லெக் ஸ்டம்புக்கு நேராக வந்ததை தவறாக அவர் வைடு என நினைத்து ஆடாமல் விட்டார் பவுல்டு ஆனார். இதனை அருமையான கண்கட்டு வித்தை என்று கம்பீர் கூறுகிறார்.


கம்பீர் இது தொடர்பாக கூறியதாவது:


என்னைப் பொறுத்தவரை ரஸல் பவுல்டு ஆக்கப்பட்ட விதம் ஒரு கண்கட்டு வித்தை. மிகப்பிரமாதமான ஐடியா அது. ஏனெனில் ஒட்டுமொத்த களவியூகமும் சாம் கரன் அந்தப் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்போகிறார் என்ற தோற்றத்தையே ஏற்படுத்தியது. ரஸலும் அதற்கு தயாராக இருந்தார்,


ஷர்துல் தாக்கூர் முதல் ஓவரை முழுதும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக வீசியிருந்தார். இந்நிலையில் சாம் கரன் லெக் ஸ்டம்பை நோக்கி வீசியது ரஸல் எதிர்பாராதது, அதனால் அது லெக் ஸ்டம்ப் வைடு என்று ரஸல் ஆடாமல் விட முடிவெடுத்து பவுல்டு ஆனார்.


ரஸல் பந்தை அடித்து ஆடிய விதம் நிச்சயம் இன்னும் 4௫ ஓவர்கள் ஆடியிருந்தால் வெற்றி நிச்சயம் என்று அவர் அடியாழ மனதில் தோன்றியிருக்கும். தான் கிரீசில் இருக்கும் வரை ஆஃப் ஸ்பின்னருக்கு ஓவர் தரமாட்டார் தோனி என்பது ரஸலுக்குத் தெரிந்திருக்கும்.


ஏற்கெனவே ஒரு ஓவரில் 24 ரன்கள் விளாசினார் ரஸல். ஆட்டமிழந்து செல்லும் போது தான் சதம் அடிக்கும் பொன்னான வாய்ப்பையும் அணியை வெற்றி பெறச் செய்யும் வாய்ப்பையும் இழந்ததாக அவர் நிச்சயம் கருதுவார்.

இத்தகைய வாய்ப்புகள் அதிகம் வாய்க்காது. ஏனெனில் வான்கடேயில் அடிக்கடி ஆடும் வாய்ப்பு கிட்டாது. வெளுத்து வாங்கினார், நிச்சயம் ரஸல் வேதனையே படுவார். சாம் கரனின் அந்தப் பந்தை அவர் தடுத்தாடியிருந்தால் கொல்கத்தா நிச்சயம் வென்றிருக்கும்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.





தோனி கேப்டன்சியை புகழும் கம்பீர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு