05,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது...

ருதுராஜ், டுபிளசியின் அசத்தலான அரைசதம் கைகொடுக்க, ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் ஐதராபாத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் பிராவோ, இம்ரான் தாகிர் நீக்கப்பட்டு லுங்கிடி, மொயீன் அலி சேர்க்கப்பட்டனர். டில்லி அணியில் அபிஷேக் சர்மா, விராத்துக்குப் பதில் சந்தீப் சர்மா, மணிஷ் பாண்டே இடம் பெற்றனர்.




ஐதராபாத் அணிக்கு பேர்ஸ்டோவ் (7), வார்னர் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மணிஷ் பாண்டே, 35 பந்தில் அரைசதம் அடித்தார். வார்னர் தன்பங்கிற்கு அரைசதம் எட்டினார். போட்டியின் 18வது ஓவரை வீசிய லுங்கிடி, சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். 


முதல் பந்தில் வார்னர் (57), 5 வது பந்தில் மணிஷ் பாண்டேவை (61) அவுட்டாக்கினார். ஷர்துல் தாகூர் வீசிய 19வது ஓவரில், 3 பவுண்டரி, 1 சிக்சர் என 20 ரன்கள் எடுத்தார் வில்லியம்சன். ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் (26), கேதர் ஜாதவ் (12) அவுட்டாகாமல் இருந்தனர். 




கடின இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு ‘சீனியர்’ டுபிளசி, ‘ஜூனியர்’ ருதுராஜ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சுசித் வீசிய 9வது ஓவரில் ருதுராஜ் ஒரு பவுண்டரி, டுபிளசி ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க 17 ரன்கள் கிடைத்தன. இருவரும் இணைந்து முதன் முறையாக, தொடர்ந்து மூன்று போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்னுக்கும் மேல் சேர்த்தனர். இருவரும் அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த போது, ருதுராஜ் (75), ரஷித் சுழலில் போல்டானார். 




மொயீன் அலி 15 ரன் எடுக்க, டுபிளசி 56 ரன்னுக்கு அவுட்டானார். கடைசி நேரத்தில் ரெய்னா, ஜடேஜா இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில் 500வது பவுண்டரி அடித்தார். சென்னை அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா (7), ரெய்னா (17) அவுட்டாகாமல் இருந்தனர்.  




ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு