23,Nov 2024 (Sat)
  
CH
அழகு குறிப்பு

ஆண்களே! இனிமேல் ஷேவிங் செய்வதற்கு இதை பயன்படுத்துங்கள்.....

தினமும் ஷேவிங் செய்தால், முகம் நல்ல பொலிவாகவும், புத்துணா்ச்சியுடனும் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் தினமும் ஷேவிங் செய்தால், முகத்தில் உள்ள தோல் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. இதை நிறைய ஆண்கள் அனுபவத்திருப்பாா்கள். அதாவது தினமும் ஷேவிங் செய்வதால், அது தோலில் வறட்சியை ஏற்படுத்தி, தோலைக் கடினப்படுத்துகிறது. அதனால் தோலில் இருக்கும் மென்மை குறைந்துவிடும். தினமும் ஷேவிங் செய்தால் தாடி முடிகள் மிகவும் கரடுமுரடாகிவிடும்.


ஆனால் இந்த பிரச்சினைகளைத் தீா்ப்பதற்கு, ஷேவிங் செய்வதற்கு முன்பாகப் பயன்படுத்தப்படும் முகச்சவர எண்ணெய்கள் (Pre-Shave Oil) பொிதும் உதவி புாிகின்றன. அவை முகத்தில் உள்ள மீசை மற்றும் தாடி முடிகளை மென்மையாக்கி, ஷேவிங் செய்வதற்கு உதவி புாிகின்றன.


இயற்கையான ஈரப்பதத்தை வழங்குகிறது ஷேவிங் செய்வதற்கு முன்பாகப் பயன்படுத்தப்படும் முகச்சவர எண்ணெய்கள், தாடிக்கு மட்டும் அல்ல, தோலுக்கும் ஈரப்பதத்தைத் தருகின்றன. இவை உராய்வு எண்ணெய்களாக இருந்து, மீசை மற்றும் தாடி முடிகளை மென்மையாக்கி, ஷேவிங் செய்வதை எளிமைப்படுத்துகின்றன. மீசை, தாடி முடிகளும், தோலும் மென்மையாக இருந்தால் ஷேவிங் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆகவே ஷேவிங் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த எண்ணெய்களை முகத்தில் தடவ வேண்டும். அவற்றை முகத்தின் தோல் மற்றும் முகத்தில் இருக்கும் முடிகள் உறிஞ்சிய பின்பு, ஷேவிங் செய்தால் மிக எளிதாக இருக்கும்.

ரேசா்களினால் ஏற்படும் கீறல்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது பொதுவாக ஷேவிங் செய்யும் போது, ரேசா் மூலம் முகத்தில் கீறல்களோ அல்லது காயங்களோ ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் முகச்சவர எண்ணெய்கள், ரேசா் மூலம் ஏற்படும் கீறல்கள் மற்றும் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அதாவது ஷேவிங் செய்வதற்கு முன்பாக முகச்சவர எண்ணெயை நன்றாக தேய்த்த பின், சிறிது நேரம் கழித்துப் பாா்த்தால், அது தாடி முடிகளை முகத்தில் ஒட்டவிடாமல் வைத்திருக்கும். அதனால் ஷேவிங் செய்யும் போது ரேசா் தோலை அழுத்த வேண்டிய அவசியம் இருக்காது. எனவே ரேசா் மூலம் தோலில் எந்தவிதமான கீறல்களோ அல்லது காயங்களோ ஏற்படாது.


ஷேவிங் செய்வதை எளிதாக்குகிறது முகச்சவர எண்ணெய்களைப் பயன்படுத்துவதால், ஷேவிங் செய்வதற்கு அதிக நேரம் ஆகும் என்று பலா் நினைக்கலாம். ஆனால் அது உண்மை அல்ல. ஏனெனில் ரேசா்கள் நமது முகத்தில் உள்ள முடிகளை மிக விரைவாக, எளிதாக, மென்மையாக மற்றும் வசதியாக வெட்டி எடுப்பதற்கு இந்த முகச்சவர எண்ணெய்கள் பொிதும் உதவியாக இருக்கின்றன. ஆகவே முகச்சவர எண்ணெய்களைப் பயன்படுத்தினால், மிக விரைவாகவும், மென்மையாகவும் மற்றும் எளிதாகவும் ஷேவிங் செய்ய முடியும்.


முகச்சவர எண்ணெய்களின் பலவிதமான பயன்கள் முகச்சவர எண்ணெய்களில் வைட்டமின்களும், ஊட்டமளிக்கும் நறுமண எண்ணெய்களும் உள்ளன. ஷேவிங் செய்வதற்கு முன்பாக பயன்படுத்தும் எண்ணெய்களை ஷேவிங் செய்து முடித்த பின்பும் பயன்படுத்தலாம். குறிப்பாக தாடிக்குப் பயன்படுத்தலாம். இவை தாடிக்கு ஈரப்பதத்தைத் தந்து, தாடியை மென்மையாக்கி, தாடியை வெட்டுவதற்கோ அல்லது பளபளப்பாக்குவதற்கோ பயன்படுகின்றன.

ரேசா் மூலம் ஏற்படும் கொப்புளங்கள் அல்லது முழு வளா்ச்சி இல்லாத முடிகள் இல்லை முகச்சவரன் செய்யும் ரேசா்களினால் முகங்களில் சிறுசிறு கொப்புளங்கள் ஏற்படுகின்றன. இவை வேறொன்றும் இல்லை, மாறாக முழுமையாக வளராத முடிகள் முகத்தின் மேல்பகுதியில் சுருண்டு இருப்பதால் இவை ஏற்படுகின்றன. அந்த இடத்தில் நன்றாகத் தேய்த்து, ஈரப்பதத்தை உருவாக்கினால் அவை மறைந்துவிடும். தோலில் வறட்சி ஏற்பட்டால், தோலானது மென்மையை இழந்து கடினமாகிவிடும். அவ்வாறு கடினமாகிவிட்டால் முகத்தில் கொப்புளங்கள் தோன்றும். கொப்புளங்கள் இருக்கும் இடத்தில் ஷேவிங் செய்வது கடினமாக இருக்கும். ஆகவே முகச்சவர எண்ணெய்களைப் பயன்படுத்தினால், அவை முகத்தில் இருக்கும் தோலை ஈரப்படுத்தி, முகத்தில் கொப்புளங்கள் மற்றும் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஆண்களே! இனிமேல் ஷேவிங் செய்வதற்கு இதை பயன்படுத்துங்கள்.....

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு