அனைத்து விதமாக சர்வதேச போட்டிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக இலங்கை அணி வீரர் திசர பெரேரா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
32 வயதான அவர், இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும் 166 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
அத்துடன் 84 ரி 20 போட்டிகளில் கலந்து கொண்ட அவர், ஒரு சிறந்த சகலதுறை வீரராக திகழ்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..