அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவினால் வடக்கு கடற் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிவக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையின் வடக்கு கடற் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை இறக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரியே நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக இராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
மீன்வளத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆழ்கடல் பகுதியில் கைவிடப்பட்ட பேருந்துகளை இறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இந்த செயற்பாட்டின் காரணமாக தமது வலைகளுக்கு சேதம் ஏற்படுவதோடு படகுகளும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனை தடுக்குமாறு கோரி நாளை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராமேஸ்வரம் துறைமுக விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.தேவதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..