வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாவடி - தோட்டவெளி பகுதியில் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதனார்மடம் சந்தைக்குப் பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள் நேற்றுமுன்தினம் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களைத் தேடிச் சென்ற போதே இந்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.













0 Comments
No Comments Here ..