இத்தாலி அணிக்கெதிரான யூரோ கால்பந்து இறுதிப் போட்டியின் போது, 19 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்து வீரர் கையில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோட்டை விட்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
லண்டனில் நேற்று நடைபெற்ற இத்தாலி அணிக்கெதிரான யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி பெனால்ட்டி வாய்ப்பில் 2-3 என்று தோல்வியடைந்தது.
ஆட்டம் முழுவதும் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி, இந்த பெனால்ட்டி சூட்டில் சொதப்பியதற்கு முக்கிய காரணமாக Bukayo Saka என்ற 19 வயது மதிக்கத்தக்க இளம் வீரர் பார்க்கப்படுகிறார்.
ஏனெனில் இவர் தனக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடிக்காமல் விட்டுவிட்டார். அதன் பின்னர் இங்கிலாந்து அணியின் மொத்த நம்பிக்கையும் உடைந்துவிட தோல்வியை சந்தித்தது.
அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பின் Bukayo Saka உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதார். அப்போது மைதானத்தின் உள்ளே வந்த இங்கிலாந்து அணியின் மேலாளர் Southgate அவரை கட்டியணைத்து தேற்றினார்.
ஒரு முக்கியமான இறுதிப் போட்டியில் வேறு யாரேனும் அனுபமிக்க வீரருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் புலம்பி வர, இந்த பெனால்ட்டி ஷுட் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வதாக, இங்கிலாந்து அணியின் மேலாளர் Southgate கூறியுள்ளார்.
இந்த பெனால்ட் ஷுட்டிற்கான வீரர்களை நான் தான் தெரிவு செய்தேன். இத்தாலி அணி ஒரு அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்தினர். இருப்பினும் தங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..