அண்மையில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் 4 அமைச்சர்களின் ஆசனங்கள் மாற்றப்படவுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.
அமைச்சர்களான உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களின் பதவிகளே இவ்வாறு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கல்வி அமைச்சராகவும், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்குக் கல்வி அமைச்சர் பதவியை அளிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
அதேவேளை, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு அவர் கடந்த காலத்தில் வகித்துவந்த வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சுப் பதவியை அளிக்கவும் அரச உயர்பீடம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..