ஜோன் கொத்தலாவல என்ற பெயரை நீக்கிவிட்டு, விரும்பினால் ராஜபக்ஷவின் பெயரைச் சேர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சேவை சங்கத்தின் உபதலைவர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் (16 ) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜோன் கொத்தலாவல என்பவர் தனது சொத்துக்களை நாட்டின் நலனுக்காகக் கையளித்த ஒரு தலைசிறந்த தலைவராவார். ஆனால் அரசாங்கம் தனது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி, புதிதாகக் கொண்டுவந்திருக்கும் சட்டமூலத்திற்கு அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது.
அதேவேளை தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களித்த அனைத்துப் பெற்றோர்களும் நாட்டின் கல்விக்கட்டமைப்பு இராணுவமயப்படுத்தலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்பதை நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..