15,Jan 2025 (Wed)
  
CH
விளையாட்டு

டோனி, கோலி, ரோகித்தின் சொத்து மதிப்பு வெளியானது! யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா? வாயை பிளக்க வைக்கும் தகவல்

ஐபிஎல் தொடர் மூலம் பல வீரர்கள் அதிகம் சம்பாதித்து வரும் நிலையில், டோனி, கோலி மற்றும் ரோகித் ஆகியோரின் சொத்து மதிப்பு தற்போது எந்தளவிற்கு உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், இப்போது உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பார்க்கும் போட்டியாக மாறியுள்ளது.

ஏனெனில் இதில் உலகில் இருக்கும் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடும் போது, போட்டிகளில் அனல் பறக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த தொடரில் ஒரு திறமை வாய்ந்த வீரர் ஐபிஎல் அணிகளுக்கு தெரிந்துவிட்டால், அந்த வீரர்களை எடுப்பதில், ஐபிஎல் அணிகளுடையே ஏலத்தில் கடும் மோதல் ஏற்படும். இதன் காரணமாகவே, கோலி, ரோகித் மற்றும் டோனி போன்றோர் அதிக ஏலத் தொகைக்கு எடுக்கப்பட்டு, தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து இன்னும் சில வீரர்கள் அதிக ஏலத்தொக்கும் எடுக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வீரர்களும், இந்த ஐபிஎல் தொடர் மூலம் அதிக சம்பாதிக்க துவங்கியுள்ளனர்.

அந்த வகையில், ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருக்கும் வீரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

இயான் மோர்கன் (கொல்கத்தா அணியின் கேப்டன்)


இங்கிலாந்து அணியின் கேப்டனும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனுமான இயான் மோர்கனின் சொத்து மதிப்பு 21.87 கோடி ரூபாய் ஆகும். இங்கிலாந்துக்கு அணிக்கான ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக இவர் ஆண்டிற்கு 2.6 கோடி ரூபாயும், கொல்கத்தா அணியிடம் 5.25 கோடி ரூபாயும் சம்பளமாக வாங்குகிறார்.

இதுமட்டுமின்றி இயான்மோர்கன் உலகம் முழுவதிலும் தற்போது வரை 12 டி20 உள்ளூர் மற்றும் வெளியூர் லீக் தொடர்களில் ஆடி வருவதாக கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சன்(ராஜஸ்தான் கேப்டன்)


இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சுசாம்சனின் சொத்து மதிப்பு 29.83 கோடி ரூபாய், ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆன இவர் 8 கோடி ரூபாய் அந்தணியிடம் சம்பளம் வாங்குகிறார்.

அதைத் தொடர்ந்து பல விளம்பர மொடல்களில் இருப்பதால், இவரின் சொத்து மதிப்பு 30 கோடியை நெருங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எல்.ராகுல்(பஞ்சாப் கேப்டன்)

பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன கே.எல்.ராகுலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 43 கோடி, பஞ்சாப் அணிக்காக விளையாட அவருக்கு ஆண்டிற்கு 11 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

கனே வில்லியம்சன்(ஹைதராபாத் கேப்டன்)

ஹைதராபாத் அணியின் கேப்டனும், நியூசிலாந்து அணியின் கேப்டனுமான கனே வில்லியம்சனின் மொத்த சொத்த மதிப்பு சுமார் 66 கோடியாம். நியூசிலாந்து கிரிக்கெட் போர்ட் இவருக்கு ஆண்டிற்கு 3.19 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கிறதாம்.

அதே போன்று ஹைதராபாத் அணி ஆண்டிற்கு 3 கோடி ரூபாய் வாங்கும் இவர், அதைத் தாண்டி பல நிறுவனங்களுக்கு விளம்பர மொடலாக உள்ளார்.

ரோகித் சர்மா(மும்பை இந்தியன்ஸ் கேப்டன்)

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும், மும்பை அணியின் கேப்டனுமான ரோகித் சர்மாவின் மொத்த சொத்து மதிப்பு 170 கோடி. இதில் மும்பை அணி அவருக்கு ஆண்டிற்கு 15 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கிறது.

இவர் இந்திய அணியின் A+-ல் இருப்பதால், இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டால் ஆண்டிற்கு 7 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். இதைத் தவிர ரோகித் சர்மா பிரபல் நிறுவனங்களான Like CEAT, Hublot, Oakley, Glenmark Pharma, Adidas என இன்னும் பல நிறுவனங்களுக்கு மொடலகாவோ அல்லது விளம்பர தூதுவராகவோ உள்ளார். இதன் மூலமே அவருக்கு ஆண்டிற்கு 7 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறதாம்.

டோனி(சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்)

இந்திய அணியின் வெற்றி கேப்டன் என்று அழைக்கப்படும் டோனி, தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் இன்னும் சென்னை அணிக்கு கேப்டனாகவே உள்ளார்.

இவரின் மொத்த சொத்த மதிப்பு 819 கோடி, இவருக்கு ஆண்டிற்கு மட்டும் 74.49 கோடி வருமானமாக கிடைக்கிறது. இதில் சென்னை அணி ஆண்டிற்கு 15 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

இதைத் தவிர விளம்பரம், விளம்பர மொடல்கள் மற்றும் இதரவை மூலம், ஆண்டிற்கு டோனிக்கு 50 கோடி ரூபாய் வருமான கிடைப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

விராட் கோலி(பெங்களூரு கேப்டன்)

இந்திய அணியின் கேப்டன் ஆன கோலி, தற்போது பெங்களூரு அணிக்கு கேப்டனாக உள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 980 கோடியாம், பெங்களூரு அணி இவருக்கு ஆண்டிற்கு 17 கோடி ரூபாய் கொடுக்கிறதாம்.

 

அதுமட்டுமின்றி பிசிசிஐ இவரை A+-ல் வைத்திருப்பதால், இவருடைய சம்பளம் மட்டும் ஆண்டிற்கு 7 கோடியாக உள்ளதாம். இதைத் தவிர கோலி, சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருப்பதன் மூலம், 178.77 கோடி ரூபாய் ஆண்டிற்கு சம்பாதிக்கிறாராம், 





டோனி, கோலி, ரோகித்தின் சொத்து மதிப்பு வெளியானது! யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா? வாயை பிளக்க வைக்கும் தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு