18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது

சட்டவிரோத கஞ்சா பொதியொன்றை தன்னகத்தே வைத்திருந்த வியலுவ பிரதேசத்தை சேர்ந்த முன்னணி பாடசாலையின் மாணவர் ஒருவரும் மற்றும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேகநபர்கள் இன்று (17) கைது செய்யப்பட்டதாக கந்தகெடிய பொலிஸார் தெரிவித்தார்.


18 வயதுடைய பாடசாலை மாணவனும் மற்றும் 29 வயதுடைய இளைஞன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களின் நடத்தை குறித்து சந்தேகம் கொண்ட பொலிஸார் அவர்களை சோதனையிட்ட போது இந்த கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை இதுவரை மதிப்பிடப்படவில்லை என கந்தகெடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு