எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாடு அழிந்துவிடும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa).
திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது.
ஒரு வலுவான நாடு ஏழு முதல் எட்டு மாதங்களுக்கு தனது வெளிநாட்டுக் கையிருப்பை வைத்திருக்க வேண்டும்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாடு அழிந்துவிடும், தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் மக்கள் மேலும் சுமைக்கு ஆளாக நேரிடும்.
அத்தியாவசியப் பொருட்களை வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளவா 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 Comments
No Comments Here ..