ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அபுதாபி செல்லவுள்ளார் .
டிசம்பர் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர்(S. Jayasankar) மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வி.பாலகிருஷ்ணன் (V. Balakrishnan) ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
0 Comments
No Comments Here ..