இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை ஜனாதிபதி இன்று நியமித்துள்ளார்.
மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் 8 பேர் கொண்ட குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாா்.
0 Comments
No Comments Here ..