சூரியவெவ நகரில் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 10 கிலோ கஞ்சா போதை பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா போதை பொருளின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியவெவ பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 32 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை கலால் திணைக்கள பரிசோதகர் அஜித் புஸ்பகுமார தலைமையிலான குழுவால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..