22,Nov 2024 (Fri)
  
CH
விளையாட்டு

19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ணம்: இந்தியாவிடம் இலங்கை தோல்வி

தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி மற்றும் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி ஆகியன மோதிய, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண தொடரின் 7ஆவது போட்டி நேற்று இடம்பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி சார்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 59 ஓட்டங்களையும் பிரியம் கார்க் (Priyam Garg) 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

298 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி, 45 தசம் 2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி சார்பாக, அணித் தலைவர் நிபுன் தனஞ்செய 50 ஓட்டங்களையும், ரவிந்து ரசந்த 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

இதனை அடுத்து, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி 90 ஓட்டங்களால் தனது வெற்றியைப் பதிவு செய்து கொண்டது. 

ஆட்ட நாயகனாக, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி சார்பில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் சிறப்பாகப் பிரகாசித்த சித்தேஷ் வீர் (Siddhesh Veer) தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி, எதிர்வரும் 22ஆம் திகதி நியூஸிலாந்தையும், 25ஆம் திகதி ஜப்பானையும் எதிர்த்து ஆட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 




19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ணம்: இந்தியாவிடம் இலங்கை தோல்வி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு