அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் கருப்பொருளான நத்தார் தினம், கிறிஸ்தவர்களின் சமயப் பண்டிகை மட்டுமல்ல, இனம், மதம், கட்சி, நிறம், சிறியோர், இளைஞர்கள், பெரியவர்கள் என்ற பேதமின்றி உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களால் கொண்டாடப்படும் கலாசார விழா என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குறிப்பிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தனது வாழ்த்துச் செய்தியில்,
“நல்லவன் தன் இதயத்தில் நல்லதை விதைப்பான், கெட்டவன் தன் இதயத்தில் கெட்டதை விதைப்பான்" என்று பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த விதத்திலும், மனிதாபிமானம் நிறைந்த விதத்திலும் நாட்டிற்கும், உலகிற்கும் தன்னை அர்ப்பணிக்க ஆண்டவர் இயேசு வழி காட்டியுள்ளார் என்பதை இது காட்டுகிறது.
0 Comments
No Comments Here ..