29,Mar 2024 (Fri)
  
CH
விளையாட்டு

இலங்கை, ஸிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை மற்றும் ஸிம்பாவே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை மற்றும் ஸிம்பாவே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது.

இந்தப் போட்டி, ஸிம்பாவேயின் ஹராரே சர்வதேச கிரிகெட் அரங்கில் நடைபெற்றது.

தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஸிம்பாவே அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஸிம்பாவே அணி சார்பாக, Craig Ervine 85 ஓட்டங்களையும், Kevin Kasuza 63 ஓட்டங்களையும், Prince Masvaure 55 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக, லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும், லகிரு குமார இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.

இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.




இலங்கை, ஸிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு