நான்கு புதிய மேம்பாலங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ஹங்கேரி மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையேயான நிதி ஒத்துழைப்பின் கீழ் இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
இதன்படி, குருணாகல் - முத்தெட்டுகல தொடருந்து கடவை, ஹிரிபிட்டிய சந்தி, பஸ்யால சந்தி, நீர்கொழும்பு மாரிஸ்டெலா சந்தி மற்றும் தலவத்துகொட சந்தி ஆகிய இடங்களில் இந்த மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அதற்கமைய, குறித்த இடங்களில் மேம்பாலங்கள் 04 மேம்பாலங்களை அமைப்பதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 Comments
No Comments Here ..