13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

பிரதமருக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள லஞ்ச ஊழல் மோசடி விசாரணை

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளது. அண்மையில் பிரதமர் தனிப்பட்ட ரீதியில் திருப்பதிக்கு விஜயம் செய்திருந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது.

பிரதமர் மகிந்த, தனியார் ஜெட் ஒன்றில் திருப்பதிக்கு விஜயம் செய்திருந்தார். அவர் தனியார் ஜெட் மூலம் இந்தியாவின் திருப்பதிக்கு மேற்கொண்ட விஜயமானது, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு சட்டங்களை மீறும் வகையிலானதா என்பது குறித்து விசாரணை நடாத்தப்பட உள்ளது.

ஊடகவியலாளர் தரிந்து உடவேகெதர என்பவரினால் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனியார் ஜெட் வண்டியொன்றில் பிரதமர் மேற்கொண்ட இந்திய விஜயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த தனியார் ஜெட் பயணத்திற்கான ஏற்பாடுகளை இலவசமாகப் பிரதமரின் நெருங்கிய நண்பர் ஒருவர் மேற்கொண்டிருந்தார் எனப் பிரதமரின் பிரதம அதிகாரி யோஷித ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, முறைப்பாட்டுக்குக் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





பிரதமருக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள லஞ்ச ஊழல் மோசடி விசாரணை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு