29,Mar 2024 (Fri)
  
CH
விளையாட்டு

மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் புதன்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,


மன்செஸ்டர் யுனைடட் எதிர் பர்ன்லி

மன்செஸ்டர் யுனைடட் தனது சொந்த மைதானமான ஓல்ட் ட்ரபர்டில் பர்ன்லி அணிக்கு எதிராக 2-0 என அதிர்ச்சித் தோல்வி ஒன்றை சந்தித்தது. பர்ன்லி ஓல்ட் ட்ரபர்டில் ப்ரீமியர் லீக்கில் பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும்.

லிவர்பூலிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-0 என தோல்வியுற்ற மன்சஸ்டர் யுனைடட் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை நெருங்கும் வாய்ப்பை தவறவிட்டது. அந்த அணி நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் 6 புள்ளிகள் பின்தங்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

சொந்த ரசிகர்களுக்கு முன் சிறந்த ஆரம்பத்தை பெற்றபோதும் ஆரொன் வான் பிசிக்கா பரிமாற்றிய இரண்டு கோல் வாய்ப்புகளை அன்தோனி மார்ஷல் மற்றும் ஜுவான் மார்டா வலைக்குள் செலுத்த தவறினர். 

இந்த வீணடிப்புகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பர்ன்லி 39 ஆவது நிமிடத்தில் வைத்து ஆஷ்லி வெஸ்ட்வுட்டின் ப்ரீ கிக்கை கிறிஸ் வூட் கோலாக மாற்றனார்.

தொடர்ந்து இரண்டாவது பாதியின் 56 ஆவது நிமிடத்தில் மேல் மூலையில் இருந்து ஜே ரொட்குஸ் அபார கோல் ஒன்றை பெற்று பர்ன்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

1962 ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடட்டை 5-2 என தோற்கடித்த பின் ஓல்ட் டிரபர்ட்டில் பர்ன்லி அவ்வணிக்கு எதிராக பெறும் முதல் வெற்றியும் இதுவாகும்.


டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் எதிர் நோர்விச் சிட்டி

ப்ரீமியர் லீக்கில் கடைசி இடத்தில் இருக்கும் நோர்விச் சிட்டி அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் வெற்றி வழிக்கு திரும்பியுள்ளது.

கடைசி நான்கு லீக் போட்டிகளில் வெற்றிபெறத் தவறிய டொட்டன்ஹாம், கடைசி மூன்று போட்டிகளில் ஒரு கோலைக் கூடப் பெறாத நிலையில் கடைசி நிமிடங்களில் சொன் ஹியுங் மின் தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் வெற்றி பெற்றது.

குறிப்பாக, ஹரி கேன் காயமுற்று ஆடாத நிலையில் கோல் ஒன்றை பெற போராடி வரும் ஹொட்ஸ்பர் அணி சார்பில் டெலி அலி முதல் பாதியில் கோல் ஒன்றை பெற்றார். 2020 ஆம் ஆண்டில் அந்த அணி பெற்ற முதல் லீக் கோலாக இது இருந்தது.

எனினும், இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி ஒன்றை கோலாக மாற்றிய டீமு புக்கி நோர்விச் அணிக்கு பதில் கோல் திருப்பினார். 

இந்நிலையில் 79 ஆவது நிமிடத்தில் நெருக்கமான தூரத்தில் இருந்து அலி பரிமாற்றிய பந்தை கொண்டு சொன், ஹொட்ஸ்புரின் வெற்றி கோலை பெற்றார். 

இந்த வெற்றியுடன் ஹொட்ஸ்புர் 24 போட்டிகளில் 34 புள்ளிகளை பெற்று 6 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. 




மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு