14,Jul 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார இன்று காலமானார்.  

உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்கும் போது அவருக்கு 71 வயது ஆகும்.

1980 களில் பிரபலமான குமரி, அரலிய, சரசி, சத்சரா மற்றும் ரெஜின போன்ற பத்திரிகைகளின் தலைமை ஆசிரியராக செயற்பட்டுவந்திருந்த அவர், 'லக்பிம' தேசிய வார இதழின் ஸ்தாபக ஆசிரியருமாவார்.

இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக நேற்றைய தினம் காலமானமை குறிப்பிடத்தக்கது.





சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு