22,Nov 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் தொடர்பான கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு.!

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைக்கு கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இலங்கை அரசாங்கம் தமது ஆட்சேபனையை தெரிவித்திருந்தது இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.


இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளாத இலங்கை அரசாங்கம் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடுவதில் எந்தவொரு நியாயமும் இல்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்றும், இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரினதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டனம் வெளியிட்டதுடன் அதனை நிராகரித்துமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 





முள்ளிவாய்க்கால் தொடர்பான கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு