தையிட்டி விகாரையை அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்
அதன் போது அங்கு சென்ற பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்த முடியாது எனவும் அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்துள்ளனர்
அதனை மீறி அங்கு நின்றவர்களை சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்த வேளை அவரை வலுக்கட்டாயமாக தூக்கி அக்காணியில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..