சன்னி லியோன் நடிந்த அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கும் கென்னடி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இதற்காக சன்னி லியோன் கேன்ஸ் நகருக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் நீலப் படங்களில் நடித்துக் கொண்டிருந்து விட்டு தொலைக்காட்சி மற்றும் திரையுலகிற்கு வந்தபோது எதிர்கொண்ட எதிர்ப்பை பற்றி பகிர்ந்துள்ளார்.
என்னுடைய அந்நாள் காதலர் தற்போதைய என்னுடைய கணவர் டேனியலிடம் நான் இந்தியா வரவில்லை என்னை எல்லோரும் வெறுப்பார்கள் என்று கூறியிருந்தேன்.
ஆனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் என்னை பங்கெடுக்க வைத்தார். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்கள் சமையலறை வரை என்னை கொண்டுபோய் சேர்த்தது.
இதனால் என்னுடைய முந்தைய முகம் முழுவதுமாக மாறியது. அதில் இருக்கும்போதே நான் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அதன் பிறகு நான் சினிமாவுக்குள் வருவதற்கு பெரிய தடை இருந்தது. என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்.
தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்தன. பெண்கள் அதிகம் பேர் என்னிடம் பேசினார்கள் என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
0 Comments
No Comments Here ..