20,Apr 2024 (Sat)
  
CH
விளையாட்டு

அகமதாபாத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் பிளே ஒஃப் சுற்றின் குவாலிபயர்-2 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன

ஐபிஎல் டி20 தொடர் பிளே ஓஃப் சுற்றின் குவாலிபயர்-2 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பான லீக் சுற்று நிறைவடைந்து, பரபரப்பான பிளே ஓஃப் சுற்று நடைபெற்று வருகிறது.


புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த குஜராத் – சென்னை அணிகளிடையே நடந்த குவாலிபயர்-1 ஆட்டத்தில், சென்னை அணி போராடி வென்று நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. 


அடுத்து 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த லக்னோ – மும்பை அணிகள் மோதிய எலிமினேட்டர் ஆட்டத்தில், மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று குவாலிபயர்-2 ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.


லக்னோ அணி ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், 2வது குவாலிபயர் ஆட்டம் இன்று அகமதாபாத் நகரில் நடக்கிறது. இப்போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 


எலிமினேட்டரில் லக்னோ அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி, அதே உற்சாகத்துடன் குஜராத் அணியின் சவாலை சந்திக்கிறது




அகமதாபாத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் பிளே ஒஃப் சுற்றின் குவாலிபயர்-2 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு