29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 4வது முறையாக இந்தியா சாம்பியன்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் பரபரப்பானஇறுதி ப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்தது.

 ஓமனில் உள்ள சலாலா நகரில் ஆண்களுக்கான 9வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடந்தது.


அதில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, தென் கொரியா, வங்கதேசம், தைவான், ஓமன், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் என 10 நாடுகள் பங்கேற்றன. இத்தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட நடப்பு சாம்பியன் இந்தியா 6வது முறையாகவும், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் 7வது முறையாகவும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் வெற்றி யாருக்கு என்பதில் கடும் போட்டி நிலவியது.

இதில் இந்தியா தொடர்ந்து 2வது முறையாக போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. 4வது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.




ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 4வது முறையாக இந்தியா சாம்பியன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு