26,Apr 2024 (Fri)
  
CH
அழகு குறிப்பு

ஆண்களே! சருமத்தை மென்மையாக்க வேண்டுமா?

மிருதுவான மற்றும மென்மையான சருமம் என்றாலே அது பெண்களுக்கு உரித்தானது என அனைவரும் நம்புகின்றனர். ஏன், ஆண்களுக்கு மிருதுவான சருமம் இருக்காதா என்ன? பொதுவாக ஆண்களின் சருமம் இயற்கையாகவே கடினமாக மற்றும் முரட்டுத்தனமாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல. பெண்கள் அளவிற்கு ஆண்கள் சருமத்தை பராமரிக்க தவறியதே இதற்கு முக்கிய காரணம்.

ஷேவிங் செய்வது மற்றொரு காரணமாக எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி ஷேவிங் செய்வதால் சருமம் கடினமாகிவிடுகிறது. எனவே, இனிமேலாவது உங்களது சருமம் மீது சிறிது அக்கறை எடுத்து பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக பெண்களை போல பேஷியல் செய்வது, அழகை பராமரிக்க செலவு செய்வது என சொல்லவில்லை.

உங்கள் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சிறுசிறு டிப்ஸ்களை இங்கே பகிர்ந்துள்ளேன். அதை படித்து தொடர்ந்து செய்து வந்தாலே போதும் பெண்களை போல நீங்களும் மிருதுவான மற்றும் மென்மையான சருமத்தை நிச்சயம் பெற முடியும். வாருங்கள், என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்…

முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும்

சருமத்தை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். நாள் முழுவதும் உங்கள் சருமம் பல்வேறு மாசுக்கள் சந்திக்கிறது. அது இறந்த செல்களை தோல் மீது தேக்குவதோடு, சரும துளைகளை கூட அடைத்திடலாம். இதனால், சருமத்தின் சீரான சுவாசம் தடைப்பட்டு பல்வேறு சரும பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே, நாளொன்றிற்கு 2 முறை முகத்தை கழுவுவது அவசியமாகிறது. காலை ஒரு முறை மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு செய்யவும். அதற்கு மென்மையான கெமிக்கல் அதிகம் இல்லாத ஃபேஷ் வாஷ் பயன்படுத்தினால் நல்லது.

ஷேவிங் செய்ய முகத்தை தயார்படுத்தவும்

தினமும் ஷேவிங் ஏராளமான ஆண்களின் அன்றாட பணியாகவே உள்ளது. ஆனால், ஷேவிங் செய்வது தேவை தானா? என்பதை கூட அறியாமல் தினமும் ஷேவிங் செய்து வருகின்றனர். அப்படி ஷேவிங் செய்யும் போது நம் முகம் அதற்கு தயாராக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால், ஷேவிங் ஒரு கடினமான வேலை. அதை சரியாக செய்யவில்லை என்றால் சருமம் நிச்சயமாக கடினமாகிவிடும்.

சரி ஷேவிங் செய்ய முகத்தை எப்படி தயார் செய்வதென்று கேட்பது புரிகிறது. ஷேவிங் செய்வதற்கு முன்பு, முகத்தை வெதுவெதுப்பான நீரினால் கழுவ வேண்டும். இதன்மூலம், சரும துளைகள் திறக்கப்படும். இப்போது ஷேவிங் செய்தால், இந்த வேலை மிகவும் மென்மையானதாக மாறிவிடும்.

சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பது

ஈரப்பதம் உள்ள சருமமே மகிழ்ச்சியான சருமம். உங்களுக்கு மிருதுவான, மென்மையான சருமம் வேண்டுமென்றால், சருமத்தை எப்போதும் வறட்சி அடையவிடாமல், ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் நாள் முழுவதும் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் சரும வறட்சி தடுக்கப்பட்டு, எப்போதும் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

ஷவரில் ஷேவிங் செய்தால் அற்புதம் நிகழும்

ஷவரில் குளிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான். ஏனென்றால், ஷவரில் குளிக்கும் போது உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, சரும துளைகளும் திறந்திருக்கும். அப்போது, ஷேவிங் செய்தால், ஷேவிங் செய்வது சுலபமாக இருப்பதோடு, சருமமும் மென்மையாக இருக்கும். கண்டிப்பாக இதை ட்ரை செய்யலாம்.

ஷேவிங் செய்யும் முறை முக்கியம்

தவறான முறையில் ஷேவிங் செய்தால், சருமம் தான் அவதிப்படும். அனைவரும் பொதுவாக செய்யும் தவறு என்றால், முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் ஷேவிங் செய்வது. முடி எந்த திசையிர் வளர்கிறதோ, அதே திசை நோக்கி தான் ஷேவிங் செய்ய வேண்டும். தவறாக மாற்றி செய்தால், சரும எரிச்சல், வலி, முடி அதிக வளர்ச்சி மற்றும் சிவப்பு திட்டுக்கள் போன்றவை ஏற்பட வழிவகுக்கும். சரியான திசையில் ஷேவிங் செய்வது சருமத்தை காப்பதோடு, நெருக்கமாக ஷேவிங் செய்யவும் உதவும்.

பொறுமை அவசியம்

சருமம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தை செய்யும் போதும், அமைதியாகவும். பொறுமையாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஷேவிங் அல்லது எதாவது க்ரீம் தடவும் போது பொறுமையாக செய்ய வேண்டும். பொறுமை இழந்து, கடுமையான விதத்தில் நடந்து கொண்டால், சருமம் எப்படி மிருதுவாக இருக்கும்? எனவே, மிருதுவான சருமம் பெறுவதற்கு பொறுமை மிகவும் அவசியம்.

சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாப்பது

சூரிய ஒளியில் அதிகமாக இருப்பது நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நீண்ட நேரம் சூரிய ஒளி சருமத்தின் மீது பட்டால், சரும வறட்சி, நிற மாற்றம், கடிமான சருமம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னை ஏற்படலாம். சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பது அவசியமான ஒன்று.

சூரியனிடம் இருந்து தப்பிக்க சன்ஸ்க்ரீன் எப்போதும் போட வேண்டும். நீண்ட நேரம் வெளியில் வேலை இருந்தால் சருமத்தை துணி பயன்படுத்தியோ அல்லது தொப்பி அணிந்தோ மறைத்து கொள்ளலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சில நாட்களுக்கு செய்தால் போதும், பலன் கிடைத்து விடும் என்று நினைக்கக்கூடாது. நம் அன்றாட பணிகளில் இவற்றையும் ஒன்றாக மாற்றி செய்து வந்தால் மட்டுமே, மிருதுவான மற்றும் மென்மையான சருமத்தை பெற முடியும் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.





ஆண்களே! சருமத்தை மென்மையாக்க வேண்டுமா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு