உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்தும் நீடித்து வருகிறது. மேலும் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. கடந்த ஆண்டு உக்ரைனின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்ற உதவிய வாக்னர் அமைப்பு உக்ரைனில் ரஷிய கொடியை நாட்டவும் செய்தது.
சமீபத்தில் வாக்னர் அமைப்பின் தலைவர் பிரிகோஜின் அதிபர் புதினுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த கிளர்ச்சி நடவடிக்கையால் ரஷியாவில் உள்நாட்டு போர் ஏற்படக்கூடிய சூழல் காணப்பட்டது.
அதன்பின் சமரசம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷிய அதிபர் புதின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைன், வாக்னர் குழு பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் பேசியதாக தகவல் வெளியானது.













0 Comments
No Comments Here ..