11,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட்- அவுஸ்திரேலிய அணி வெற்றி

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னைலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி வரும் 6-ம் திகதி தொடங்குகிறது.


இந்நிலையில் எஞ்சிய 3 போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணியில் கடந்த டெஸ்ட் போட்டியில் காயமடைந்த நாதன் லயன் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய அணி விவரம்:- பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்த், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மைக்கேல் நசீர், ஜிம்மி பெய்ர்சன் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.




இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட்- அவுஸ்திரேலிய அணி வெற்றி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு