18,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தைவிட 142 ரன்கள் முன்னிலையில் அவுஸ்திரேலியா அணி

ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.


இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பென் ஸ்டோக்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரை சதம் விளாசினார். 9 விக்கெட்டுகளை இழந்ததால் அதிரடியாக விளையாடிய ஸ்டோக்ஸ் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 26 ரன்கள் முன்னிலையுடன் 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது.


முதலாவதாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 43 ரன்களிலும், டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும் அவுட்டானார்கள். தொடர்ந்து மார்னஸ் 33 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், இங்கிலாந்தைவிட அவுஸ்திரேலியா அணி 142 ரன்கள் முன்னிலையில் உள்ளது




ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தைவிட 142 ரன்கள் முன்னிலையில் அவுஸ்திரேலியா அணி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு