11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா

தூதரகங்களிலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

71வது குடியரசு தின விழா, நேற்று(26) கொண்டாடப்பட்டது. நம் நாட்டில் மட்டுமின்றி, உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும், இவ்விழா கொண்டாடப்பட்டது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்திய தூதர், தரஞ்சித் சிங் சித்து ஒருங்கிணைத்து நடத்திய விழாவில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும், அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சேவும் பங்கேற்றனர்.

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் உள்ள இந்திய தூதரகத்தில், குடியரசு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்தன. இதைத்தவிர, சிட்னி, மெல்போர்ன் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.பாகிஸ்தானில், இந்திய தூதர் கவுரவ் அலுவாலியா, தேசியக்கொடி ஏற்றி, 71வது குடியரசு தின கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தார்.அதைத்தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சிகள், இந்தியாவின் பன்முகத் தன்மையை வெளிபடுத்தும் வகையில், அமைந்தன.

இதைத்தவிர, வங்கதேசம், நேபாளம், இஸ்ரேல், நியூசிலாந்து, ஐக்கிய அரேபிய அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. எனினும், சீனாவில், 'கொரோனா வைரஸ்' பாதிப்பு காரணமாக, குடியரசு தின கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவின் 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, மூவர்ண கொடியின் நிறத்தில் ஜொலித்தது. மேலும் உலகம் முழுவதும் உள்ள இந்திய இதைத்தவிர, வங்கதேசம், நேபாளம், இஸ்ரேல், நியூசிலாந்து, ஐக்கிய அரேபிய அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. எனினும், சீனாவில், 'கொரோனா வைரஸ்' பாதிப்பு காரணமாக, குடியரசு தின கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.



— Gulf News (@gulf_news) January 26, 2020







மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு