27,Apr 2024 (Sat)
  
CH
சினிமா

சிவப்பு நிற உடையில் வலம் வரும் தமன்னா

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் ஸ்டோரிஸ் 2-வில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த வெப் தொடரில் படுக்கை அறை காட்சிகளும் லிப் லாக் காட்சிகளிலும் விஜய் வர்மாவுடன நெருக்கமாக நடித்தார். தமன்னா-விஜய் வர்மாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா காவாலா பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் தமன்னா, தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவப்பு நிற உடையில் இருக்கும் தமன்னாவின் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த சிவப்பு நிற உடையை தமன்னா ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவுக்கு அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.




சிவப்பு நிற உடையில் வலம் வரும் தமன்னா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு