02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கனடா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹேலி ரசோ 9-வது நிமிடத்திலும் 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.


முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியிலும் ஆஸ்திரேலிய அணி 2 கோல்களை பதிவு செய்தது. மேரி ஃபோலர் மற்றும் ஸ்டீபனி கேட்லி ஒரு கோல்கள் அடித்தனர். இதனால் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது. பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரிபப்ளிக் ஆப் அயர்லாந்து மற்றும் நைஜீரியா அணிகள் மோதின. இரு அணிகளும் கடைசி வரை ஒரு கோல்களும் அடிக்கவில்லை. பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் நைஜிரியா அணி 2-வது இடத்திலும் உள்ளது.

தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களை சாக்ஷி அகர்வால் கைவசம் வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை கோவாவில் கேக் வெட்டி கொண்டாடினார்

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு