06,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

கட்டட பணியின் போது ராட்சத இயந்திரம் விழுந்து 17 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தனே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3-ம் கட்ட பணி நடைபெற்று வந்தது. இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் (ராட்சத இயந்திரம்) பயன்படுத்தப்படும்.


திடீரென அந்த ராட்சத இயந்திரம் சரிந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 பேர் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.


அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மும்பை- நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலையாக இந்த சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலை நாக்பூர், வாசிம், வர்தா, அகமதாபாத், பல்தானா, அவுரங்கபாத், அமாரவதி, ஜல்னா, நாஷிக் மற்றும் தானே மாவட்டங்களை கடந்து செல்கிறது




கட்டட பணியின் போது ராட்சத இயந்திரம் விழுந்து 17 பேர் பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு