தி.மு.க. ஆட்சியை அகற்றும் நோக்கிலேயே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்ட சபையின் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பரப்பப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தற்போதைய நிலையில் எதனையும் கூறமுடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..