இந்தியத் தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 10) காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் ஆகிய பகுதிகளிலும், அரியானாவின் குராவாரா உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் குராவாரா பகுதியில் இருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை, நிலநடுக்கத்தால் எவ்விதமான உயிர்ச் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
0 Comments
No Comments Here ..