29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

மாமல்லபுரத்தில் வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை சர்வதேச கடல் அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி

கடற்கரை கோயில் வடபகுதி கடலோரத்தில் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் இந்திய வீரர்களும் பங்கேற்கிறார்கள். சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதியான இந்திய வீரர்கள் 70 பேரை தேர்வு செய்யும் "நேஷனல் லெவல்" போட்டி இன்று மாமல்லபுரத்தில் துவங்கியது. இதில், கோவா, பாண்டிச்சேரி, மங்களூர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிசா, சென்னை, கோவளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சர்பிங் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பிட்ட நிமிடத்தில் வரும், அலை கணக்கை வைத்து அதில் விழாமல் அதிக நேரம் சர்ப் செய்வதை கணக்கிட்டு, மாநிலம் வாரியாக சர்வதேச வீரர்களை, சர்பிங் பெடரேசன் ஆப் இந்தியா, தமிழ்நாடு சர்ப் அசோசியேசன் அமைப்பினர் இன்று காலையில் இருந்து தேர்வு செய்து வருகின்றனர்




மாமல்லபுரத்தில் வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை சர்வதேச கடல் அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு