பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தீபிகா படுகோன். வட இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
வசீகரிக்கும் தோற்றம், நேர்த்தியான நடிப்பு, வியக்க வைக்கும் கதாபாத்திரங்கள் என சினிமா உலகில் தனக்கென தனி முத்திரை பதித்திருப்பவர் தீபிகா படுகோன்
பாஜிரோ மஸ்தானி', 'பத்மாவத்' மற்றும் பல படங்களில் தீபிகா படுகோனுடன் ஜோடி போட்டவர் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்.
விருது வழங்கும் விழா, படத்தின் ப்ரோமோஷன், என எந்த ஒரு நிகழ்வுக்கு சென்றாலும் இவர்களின் ஜோடியை அனைவரும் ரசித்துப் பார்ப்பதுண்டு
Made For Each Other என்று பலரும் கண்ணு போடும் வகையில் இந்த ஜோடி காதல் பொலிவுடன் வளம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாக பல செய்திகள் உலா வந்தது. ஆனால் எல்லாம் வெறும் வதந்தி தான் என்று நிரூபிக்கும் வண்ணம் இந்த அழகிய ஜோடி காதல் பொங்க உலா வருகிறார்கள்
உலகம் முழுவதும் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது, இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் உங்களை எல்லாவிதத்திலும் மகிழ்விக்க கூடியவர், மதிக்கக்கூடியவர், உங்கள் வாழ்க்கையை அழகாக்குபவர், உங்களை சிரிக்கவைப்பவர் உங்கள் நண்பனாக இவைகளை உங்கள் வாழ்வில் கொடுப்பவரை காதலித்து கரம்பிடியுங்கள் என்று தீபிகா போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது
0 Comments
No Comments Here ..