16,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

இளவாலை யங் ஹென்றீஸ் அணி , குருநகர் பாடும் மீன் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி

A one media வின் ஒருங்கிணைப்பில் வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடத்திய JAFFNA FOOTBALL PREMIER LEAGUE இன் இறுதி போட்டி கடந்த ஞாயிற்று கிழமை (06.08.2023 ) துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

ஆட்டம் முழுவதும் விறுவிறுப்பாக சென்று இருந்தாலும் இரண்டு அணிகளும் கோல் போட தவறி இருந்தார்கள். 

இதனைத் தொடர்ந்து ஆட்டம் பெனால்டிக்கு சென்றது. முதல் பெனால்ட்டியை இளவாலை யங் ஹென்றிஸ் அணி அடிக்க தவறி இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு பெனால்டி சுற்றில் 4-3 என வெற்றி பெற்றார்கள்.


இப் போட்டியை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் சிறந்த வளர்முக வீரருக்கான விருது சென்ட் நிக்கலஸ் அணி வீரர் ஜெரோமுக்கு சென்றது. 

அதே வேளையில் சிறந்த கோல் காப்பாளர் விருது இளவாலை யங் ஹென்றிஸ் அணியின் அமல்ராஜ் பெற்றுக்கொண்டார். அதேபோன்று கோல்டன் பூட்ஸ் விருது இளவாலை யங் ஹென்றிஸ் அணியில் ஜூட் சுபன் வசமானது.




இளவாலை யங் ஹென்றீஸ் அணி , குருநகர் பாடும் மீன் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு