மேலும் படிக்க 30 வயதான ஹரி கேன் கடந்த 19 ஆண்டுகளாக வடக்கு லண்டன் அணிக்காக விளையாடி வந்தார். 100 மில்லியன் பவுண்டுகளுக்கு குறைவான எந்த ஒப்பந்தமும் ஏற்க முடியாது என டோட்டன்ஹாம் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மொத்தம் 103 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக களமிறங்க இருப்பதால், மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொள்ள ஹரி கேன் ஜெர்மனிக்கு செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கான 100 பந்து போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் வெல்ஷ் பயர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பர்மிங்காம் பீனிக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெல்ஷ் பயர் அணி 100 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பர்மிங்காம் பீனிக்ஸ் 100 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
0 Comments
No Comments Here ..