05,May 2024 (Sun)
  
CH
சினிமா

திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்

என்னைப் பற்றிய போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை, அது பயனற்றது என தெரியும் என்று நடிகை லட்சுமி மேனனுடன் தனக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளுக்கு நடிகர் விஷால் முற்றுப்புள்ளி வைத்தார். நடிகை லட்சுமி மேனனுடன் எனக்கு திருமணம் என பரவிவரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.


இது ஆதாரமற்றது. நடிகை என்பதை தாண்டி முதலில் அவர் ஒரு பெண், நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து, அடையாளத்தை கெடுக்கிறீர்கள். நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை காலமும், நேரமும் கணிக்க முடியாது, நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.




திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு