04,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள் மாணவர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் ஜெகதீசனை தொடர்ந்து அவரது தந்தையும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: சென்னை குரோம்பேட்டையில், நீட் தேர்வு தோல்வியால் மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தையும் மறுநாளே தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

நீட் தேர்வு எனும் பலி பீடத்தில் பலியானவர்கள் பட்டியலில், ஜெகதீஸ்வரன் சேர்ந்துவிட்டது மிக கொடூரமான நிகழ்வு. மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள்; எந்த சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.


மாணவர்கள் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வை நீக்க சட்ட ரீதியான முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. முதல்முறை நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பினார் கவர்னர். மசோதாவுக்கு 2வது முறை ஒப்புதல் தந்தாக வேண்டும், ஆனால் குடியரசு தலைவருக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார்.


 நீட் மசோதா எங்காவது போய் கிடப்பில் போடப்பட வேண்டும் என்பது தான் கவர்னர் ரவியின் எண்ணம். நீட் தேர்வால் பணம் படைத்தவர்களுக்கு மருத்துவ கல்வி என்ற நிலையை உருவாக் கிவிட்டார்கள். இன்னும் சில மாதங்களில் அரசியல் மாற்றம் நடக்கும்போது, நீட் தடுப்பு சுவர் உதிர்ந்து விழும். நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட மாட்டேன் என்பவர்களெல்லாம் காணாமல் போய்விடுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள் மாணவர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு